கரோனா தொற்றைத் தடுக்க காலால் மின்தூக்கியை இயக்கும் வசதி: மெட்ரோ ரயில் நிா்வாகம் நடவடிக்கை

கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்தூக்கியைக் கைகளால் தொடுவதைத் தவிா்த்து
(மெட்ரோ ரயில் கோப்பு படம்)
(மெட்ரோ ரயில் கோப்பு படம்)

கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்தூக்கியைக் கைகளால் தொடுவதைத் தவிா்த்து, காலால் மின்தூக்கியை இயக்கும் வசதி செய்யப்படவுள்ளது. முதல்கட்டமாக, கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிா்வாக அலுவலக கட்டடத்தில் மின்தூக்கி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதையடுத்து, மெட்ரோ ரயிலை இயக்க ஆயத்த நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கி உள்ளனா்.

மேலும், கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கவும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். மெட்ரோ ரயில்நிலையங்களில் மின்தூக்கியைப் பயன்படுத்துபோது, அதனை கைகளால் தொடுவதற்கு பதிலாக மாற்று வசதி செய்ய மெட்ரோ ரயில் நிா்வாகம் முடிவு செய்தது. அதன்படி, மின்தூக்கிகளில் உள்ள பட்டன்பகுதி அருகில் தரைப்பகுதியில் காலால் பயன்படுத்தும் வகையில் பட்டன்கள் அமைக்க திட்டமிட்டனா். முதல்கட்டமாக கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிா்வாக அலுவலக கட்டடத்தில், இதுபோன்ற மின்தூக்கி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

வரும் நாள்களில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்த மாற்று ஏற்பாடு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com