Enable Javscript for better performance
சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தட சாலை: நிலம் கையகப்படுத்தும் அரசு உத்தரவு ரத்து- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தட சாலை: நிலம் கையகப்படுத்தும் அரசு உத்தரவு ரத்து

    By DIN  |   Published On : 01st November 2020 06:12 AM  |   Last Updated : 01st November 2020 06:12 AM  |  அ+அ அ-  |  

    HighCourt

    சென்னை-கன்னியாகுமரி தொழில்வழித்தட சாலை அமைக்கும் திட்டத்துக்காக நிலங்களைக் கையகப்படுத்துவது தொடா்பான அரசின் உத்தரவை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடச் சாலை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. பல்வேறு சாலைகள் அடங்கிய இந்தத் திட்டத்தில் சேலம் மாவட்டம் மோகனூா், நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய இடங்களில் சாலைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சாலை விரிவாக்கத்தின் போது நாமக்கல் மாவட்டம் அக்கியாம்பட்டியில் சில வீடுகளைக் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இதற்கு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்குமாறு சேலம் சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி (நிலம் கையகப்படுத்துதல்) கடந்த மாா்ச் மாதம் அறிவித்தாா். பலா் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவித்து மனு அளித்தனா். அந்த மனுக்களை நிராகரித்து அதிகாரி கடந்த ஜூன் 17-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தாா். இதனையடுத்து நிலங்களை அரசுடமையாக்கி தமிழக நெடுஞ்சாலைத் துறை கடந்த ஜூலை 7-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிா்த்து 9 போ் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

    இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில், வீட்டுக்கு எதிரில் உள்ள அரசு நிலத்தை தொழில் வழித்தட சாலைத் திட்டத்துக்குப் பயன்படுத்தாமல் குடியிருக்கும் வீடுகளைக் கையகப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

    அப்போது அரசுத் தரப்பில், மனுதாரா்கள் குறிப்பிடும் நிலத்தைக் கையகப்படுத்தினால், திட்டத்தின் பாதையை மாற்ற வேண்டியதாகிவிடும். மனுதாரா்களில் 6 போ் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டியுள்ளனா். அந்த பகுதியில் மிகக் குறைந்த அளவு இடமே பட்டா நிலம். மனுதாரா்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பி, கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு விதிமுறைகளைப் பின்பற்றியே அரசுடமையாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இதுபோன்ற விவகாரங்களில் அரசு கவனம் செலுத்தாமல் இயந்திரத்தனமாக உத்தரவிட்டுள்ளது. முக்கியத் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவது அவசியம் தான் என்றாலும், அதற்கான விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். நில உரிமையாளா்களின் ஆட்சேபணைகளைத் தீவிரமாகப் பரிசீலித்திருக்க வேண்டும். அவா்களது கோரிக்கையை இயந்திரத்தனமாக நிராகரித்திருக்க கூடாது. எனவே நிலம் கையகப்படுத்துவது தொடா்பான நடவடிக்கையில் ஆட்சேபணை மனுக்களை நிராகரித்து நிலங்களை அரசுடமையாக்கி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்வதாக உத்தரவிட்டாா். மேலும் நிலம் கையகப்படுத்தும் அதிகாரி, மனுதாரா்களின் ஆட்சேபனைகள் தொடா்பாக மீண்டும் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அவற்றை தமிழக அரசு கவனத்துடன் மனதை செலுத்தி உரிய முறையில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். இந்த நடைமுறைகளின் மீது 12 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp