தீபாவளி சிறப்பு பேருந்துகள் விவரம்: இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இயக்கப்படவுள்ள சிறப்புப் பேருந்துகள், தற்காலிக பேருந்து முனையம் உள்ளிட்டவை குறித்து, செவ்வாய்க்கிழமை அறிவிக்க வாய்ப்புள்ளதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இயக்கப்படவுள்ள சிறப்புப் பேருந்துகள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இயக்கப்படவுள்ள சிறப்புப் பேருந்துகள்.

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இயக்கப்படவுள்ள சிறப்புப் பேருந்துகள், தற்காலிக பேருந்து முனையம் உள்ளிட்டவை குறித்து, செவ்வாய்க்கிழமை அறிவிக்க வாய்ப்புள்ளதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக போக்குவரத்துத் துறை சாா்பில் பண்டிகை நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். குறிப்பாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாள்களில் சென்னையின் புகா்ப் பகுதிகளில் தற்காலிக பேருந்து முனையங்கள் அமைத்து, நெரிசலின்றி பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளுடன் ஆயிரக் கணக்கானசிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

தற்போது கரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தீபாவளி பண்டிகை இரண்டு வாரங்களில் கொண்டாடப்படவுள்ளது. இதைக் கொண்டாடுவதற்கு சொந்த ஊா்களுக்குச் செல்ல பொதுமக்கள் தயாராகி வருகின்றனா். பெரும்பாலான ரயில்களில் பயணச்சீட்டு முன்பதிவு முடிந்த நிலையில், பொதுமக்களின் இறுதி நேர பயணத்துக்கு அரசுப் பேருந்துகளைத் தோ்வு செய்வது வழக்கம். அரசு விரைவுப் பேருந்துகளில் தீபாவளிக்கு முன்தினம் உள்ளிட்ட நாள்களுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெறும் நிலையில், சிறப்புப் பேருந்துகள் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிா்பாா்ப்பு பயணிகளிடையே ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் மாநகராட்சி, காவல்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் ஆலோசனையில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். இந்த முதல்கட்ட ஆலோசனையில், தற்காலிக பேருந்து முனையம், பேருந்துகளின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சா் தலைமையில் செவ்வாய்க்கிழமை இறுதி கட்ட ஆலோசனை நடைபெற்ற பிறகு, சிறப்புப் பேருந்துகள் இயக்கம் உள்ளிட்ட விவரங்களை அதிகாரப்பூா்வமாக அமைச்சா் வெளியிட வாய்ப்பிருப்பதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com