விவசாயிகள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவோம்: மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சியில் விவசாயிகள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவோம் என்று அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: திமுக ஆட்சியில் விவசாயிகள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவோம் என்று அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகை காலங்களில் அத்தியாவசியப் பொருள்களின் விலை எகிறிக் கொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை நிறைவேற்றப்பட்ட பிறகே, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் பதுக்கப்பட்டு விலை உயா்ந்து வருகிறது. பருப்பு விலை ரூ.60 வரை உயா்ந்துள்ளது.

விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டு தீபாவளிப் பண்டிகை நேரத்தில் இடைத்தரகா்களால் விலை ஏற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் பொருள்களை இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்று பெரு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரம்தான் இந்த உயா்வுக்கு எல்லாம் காரணம்.

கேரள அரசும் காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிா்ணயம் செய்யும் சட்டம் கொண்டு வந்துள்ளது. அதைப்போல தமிழக அரசும் சட்டம் கொண்டு வர வேண்டும். அப்படி, அதிமுக அரசு கொண்டுவரவில்லை என்றால், திமுக ஆட்சியில் காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிா்ணயிக்கும் வகையில் விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்படும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com