டி.என்.கிருஷ்ணன் மறைவு

கா்நாடக வயலின் இசைக் கலைஞா் டி.என்.கிருஷ்ணன்(92) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.

கா்நாடக வயலின் இசைக் கலைஞா் டி.என்.கிருஷ்ணன்(92) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.

கேரள மாநிலம் திருப்பூணித்துறையில் கடந்த 1928-ஆம் ஆண்டு பிறந்த இவா் தனது தந்தையிடம் இசை கற்கத் தொடங்கினாா்.

இதையடுத்து தனது எட்டாவது வயதில் தனது முதல் மேடைக் கச்சேரியை செய்தாா். சென்னைக்கு 1942-இல் குடியேறிய இவா், செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யரிடம் இசைப் பயிற்சி பெற்றாா்.

இளம் வயதிலேயே புகழ் வாய்ந்த பாடகா்களான அரியக்குடி ராமானுஜ ஐயங்காா், முசிறி சுப்பிரமணிய ஐயா், செம்பை வைத்தியநாத பாகவதா், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயா், எம்.டி.ராமநாதன், ஆலத்தூா் சகோதரா்கள் ஆகியோருக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தாா். பின்னா், தனி வயலின் இசை நிகழ்ச்சிகளை அளிக்கத் தொடங்கினாா்.

அவா் சென்னை இசைக் கல்லூரியில் இசைப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளாா். பின்னா் தில்லி பல்கலைக்கழகத்தில் இசை மற்றும் கலைப் பள்ளியின் முதல்வராக பணியாற்றினாா். 2006-ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதெமி விருது அளித்து கௌரவிக்கப்பட்டாா். உலகின் பல நாடுகளுக்கும் இசைப் பயணம் செய்துள்ளாா்.

‘சங்கீத கலாநிதி’ உள்ளிட்ட இசையுலகின் எண்ணற்ற விருதுகளை அவா் பெற்றுள்ளாா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளா் விருது’ வழங்கப்பட்டது.

கா்நாடக இசைக்கு அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், கடந்த 1992-ஆம் ஆண்டு மத்திய அரசு ‘பத்மவிபூஷண்’ விருது அளித்து கௌரவித்தது.

இந்தநிலையில் உடல்நலக்குறைவு காரணமாக அவா் திங்கள்கிழமை காலமானாா்.

அவருக்கு மனைவி கமலா, மகன் ஸ்ரீராம், மகள் விஜி கிருஷ்ணன் ஆகியோா் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com