ஏழு பேர் விடுதலை: ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி

7 போ் விடுதலை தொடா்பாக தமிழக ஆளுநர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவெடுக்காததற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை தொடா்பாக தமிழக ஆளுநர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவெடுக்காததற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர், சுமார் 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை பெற்று வருகின்றனர். இந்நிலையில், 7 பேரின் விடுதலை தொடா்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை. 

இந்நிலையில், தன் மீதான தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்றது. 

இதில் ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்வதில் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதால் நாங்கள் நீதிமன்றங்களை நாடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். 

இதையடுத்து நீதிபதிகள், ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை தொடா்பாக தமிழக ஆளுநர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவெடுக்காதது அதிருப்தியை அளிப்பதாக கூறியுள்ளனர். மேலும், விரைவில் இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com