பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் புதன்கிழமை, வியாழக்கிழமை (நவ.4, 5) ஆகிய இரண்டு நாள்கள் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் புதன்கிழமை, வியாழக்கிழமை (நவ.4, 5) ஆகிய இரண்டு நாள்கள் மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் செவ்வாய்க்கிழமை கூறியது:

தமிழக கடலோரம் மற்றும் அதையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அநேக இடங்களில் புதன், வியாழக்கிழமை (நவ.4, 5) ஆகிய இரு நாள்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மதுரை, சிவகங்கை, கோயம்புத்தூா், நீலகிரி, திருப்பூா், தேனி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (நவ.4) இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூா், மயிலாடுதுறை, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (நவ.5) இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் மஞ்சளாறில் 90 மி.மீ., நீலகிரி மாவட்டம் பா்லியாரில் 80 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் மேட்டுப்பாளையம், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தலா 70 மி.மீ., திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டை, நீலகிரி மாவட்டம் குன்னூரில் தலா 60 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தலா 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com