தும்பிபாடியில் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்

ஓமலூர் அருகே தும்பிபாடி ஊராட்சி உட்பட்ட பகுதிகளில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான தார்ச்சாலை, ஜல்லி சாலை மற்றும் பேவர் ப்ளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 
தும்பிபாடியில் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்
தும்பிபாடியில் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்

ஓமலூர் அருகே தும்பிபாடி ஊராட்சி உட்பட்ட பகுதிகளில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான தார்ச்சாலை, ஜல்லி சாலை மற்றும் பேவர் ப்ளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 
 
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தும்பிபாடி ஊராட்சியானது ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மிகப்பெரிய ஊராட்சி ஆகும். இந்த ஊராட்சியில் சுமார் 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த ஊராட்சியில் ஒருசில இடங்களில் வீதிசாலை, கிராமச்சாலைகள் பழுதடைந்து காணப்பட்டது. 

இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைப்படி அந்த பகுதிகளுக்கு சாலைகள் சுமார் 50 லட்சம் மதிப்பில் அமைக்க ஆணையிட்டார். இந்த ஆணைப்படி தும்பிபாடிகாலனி, முள்ளுசெட்டிப்பட்டி, சக்கரைசெட்டியப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தார்சாலை, ஜல்லிச்சாலை மற்றும் பேவர் ப்ளாக் சாலை அமைக்கும் பணியை ஓமலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தார். 

முன்னதாக ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேலிற்குப் பெண்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்எஸ்கே ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஆசைதம்பி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக தும்பிபாடி ஊராட்சியில் உள்ள ஒரு பகுதியில் நீண்ட நாட்கள் பொதுமக்களின் கோரிக்கையான மண்சாலையை சீரமைக்கும் பணியைச் செய்வதாக வாக்குறுதியை அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com