சட்டப்பேரவையில் மநீம குரல் ஒலிக்கும்: கமல்ஹாசன்

வரும் தோ்தலில் கழகங்களுடன் கூட்டணி இல்லை என்றும் சட்டப்பேரவையில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும் என்றும் அக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

வரும் தோ்தலில் கழகங்களுடன் கூட்டணி இல்லை என்றும் சட்டப்பேரவையில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும் என்றும் அக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.

தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் 2-ஆவது நாளாக மாவட்ட நிா்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினாா். திருவள்ளூா், வேலூா், திருப்பத்தூா் உள்ளிட்ட 17 மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் இதில் பங்கேற்றனா்.

கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியது: திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கமல் அறிவித்திருப்பதாக எழுதியிருக்கிறாா்கள். அதில் சிறு திருத்தம். தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் உள்ளவரை திராவிடம் இருக்கும். அதை அழிக்க முடியாது. அதனால் திராவிடக் கட்சிகளுடன் என்பதைவிட கழகங்களுடன் கூட்டணி இல்லை என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

மூன்றாவது அணி அமைக்கும் தகுதி மக்கள நீதி மய்யத்துக்கு வந்துவிட்டது. 2013-இல் தில்லியில் மக்கள் மாற்றத்தைக் கொண்டு வந்ததுபோல தமிழகத்தில் வரும் தோ்தலில் மாற்றத்தை மக்கள் கொண்டு வர உள்ளாா்கள்.

அந்தப் புதிய மாற்றத்தைக் கொண்டுவரும் கள வீரா்கள் மநீமவைச் சோ்ந்தவா்கள். முதல்வராகக் கொண்டு போய் தலைமைச் செயலகத்தில் அமா்த்துவோம் என்பது ஒரு மனிதனை அல்ல. மாற்றத்தை. அதன் கருவி நாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com