இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் ஒரு செங்கலைக் கூட அகற்றக்கூடாது: உயர்நீதிமன்றம்

இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு கோவிலில் இருந்தும் ஒரு செங்கலைக் கூட அகற்றக்கூடாது என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

சென்னை: இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு கோவிலில் இருந்தும் ஒரு செங்கலைக் கூட அகற்றக்கூடாது என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் புனரமைப்புக் குழு அமைப்பது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான ரங்கராஜன் நரசிம்மன் ஆஜராகி, கரூர் மாவட்டம் கார்வழி எனும் பகுதியில் 500-ஆண்டுகள் பழமையான செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை இடிக்க இந்துசமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. கோவிலை இடிக்கக்கூடாது என நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

அப்போது நீதிபதிகள், மனுதாரர் குறிப்பிடும் கோவில் வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்களின் பட்டியலில் உள்ளதா, எதற்காக இந்த கோவிலை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, இதே போன்று எத்தனை கோவில்களை இடிக்க இந்துசமய அறநிலையத்துறை திட்டம் வைத்துள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். 

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வெங்கடேஷ், மனுதாரர் குறிப்பிடும் கோவிலை இடிக்க உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என தெரிவித்தார். 

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் மட்டுமின்றி, அனைத்து நிலைகளிலும் கோவில்களைப் பராமரிப்பது தொடர்பான குழுக்களை அமைத்துள்ளீர்கள். இந்த குழுக்கள் அரசாணையின் அடிப்படையில் அமைக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பினர். 

மேலும், இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு கோவிலிலும் ஒரு செங்கலைக் கூட அகற்றக்கூடாது என அறிவுறுத்தினர். 

பின்னர் இந்த விவகாரம் குறித்து இந்துசமய அறநிலையத்துறை ஆணையருக்கு தெரியப்படுத்த வேண்டும். அறநிலையத்துறை ஆணையர், இணை ஆணையர் மற்றும் அனைத்து கோவில் செயல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பர் 18-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com