பொன்னுச்சங்கர் காலமானார்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் வீரப்பூர் பெருந்திருவிழாக்களில் சாம்புவானாக காளை முரசு கொட்டி செல்லும் பொன்னுச்சங்கர் காலமானார்.
பொன்னுச்சங்கர்
பொன்னுச்சங்கர்


திருச்சி மாவட்டம் மணப்பாறையில், பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் வீரப்பூர் பெருந்திருவிழாக்களில் சாம்புவானாக காளை முரசு கொட்டி செல்லும் பொன்னுச்சங்கர் காலமானார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், கி.பி.1020-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழப் பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னராக ஆட்சி புரிந்த அண்ணன்மார் தெய்வங்கள் என்றழைக்கப்டும் பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் வீர வரலாற்று சிறப்புமிக்க வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவிலில் நடைபெறும் மாசிப்பெருந்திருவிழா,  பெரிய தேரோட்டம், விஜயதசமி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பொன்னர் குதிரை வாகனத்திலும், பெரியகாண்டியம்மன் யானை வாகனத்திலும் அம்பிடும் வேடபரி நடைபெறும் போது அவற்றுக்கு முன்னதாக சாம்புவானாக காளை முரசு கொட்டி செல்லுபவர் பொன்னுச்சங்கர். 

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் வீரப்பூர் பெருந்திருவிழாக்களில் சாம்புவானாக காளை முரசு கொட்டி செல்லும் பொன்னுச்சங்கர்.

கடந்த ஒராண்டிற்கும் மேலாக உடல்நலக்குறைவால் அவதியுற்ற வந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 52. பொன்னுச்சங்கருக்கு மல்லிகா என்ற மனைவியும், ஜெயராஜ்(24) என்ற மகனும், ரம்யா(22) என்ற மகளும் உள்ளனர். 

கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக வீரப்பூர் பெருந்திருவிழாக்களில் சாம்புவனாக காளை முரசு கொட்டி சென்றவர் பொன்னுச்சங்கர். அரசு நிலைபாளயத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com