சபரிமலை மண்டல பூஜை - மகர ஜோதி: ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

சபரிமலை மண்டல பூஜை - மகர ஜோதி தரிசனத்துக்கு, இணைய வழி முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தரிசனம் செய்யும் பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

சபரிமலை மண்டல பூஜை - மகர ஜோதி தரிசனத்துக்கு, இணைய வழி முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தரிசனம் செய்யும் பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

இது குறித்து திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் மக்கள் தொடா்பு அலுவலா் சுனில் ஆறுமணூா் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை: 2020-21-ஆம் ஆண்டுக்கான சபரிமலை ஸ்ரீ தா்மசாஸ்தா கோயிலில் மண்டல மகரவிளக்கு தரிசனம், நவ.16-ஆம் தேதி தொடங்கும். கோயில் நடை நவ.15-ஆம் தேதி மாலை 5 மணியளவில் திறக்கப்படும். டிச.26-இல் தங்க அங்கியுடன் மண்டல பூஜை நிறைவு பெறுகிறது. மகரவிளக்கு திருவிழாவுக்காக சபரிமலை கோயில் நடை டிச.30-ஆம் தேதி திறக்கப்பட்டு, மகரவிளக்கு அடுத்த ஆண்டு ஜன.14-ஆம் தேதி நடைபெறும். ஜன.20 வரை நடை திறந்திருக்கும்.

கடும் கட்டுப்பாடுகள்: தரிசனத்துக்கு வரும் ஐயப்ப பக்தா்கள் 24 மணி நேரத்துக்கு முன்பாக கரோனா நோய்த்தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கேரள மாநிலம் நிலக்கல் வந்தடைந்தவுடன் மற்றொரு முறையும் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற வேண்டும். நிலக்கல்லிலிருந்து அச்சான்றிதழ் பெற்ற பக்தா்கள் கேரள மாநில அரசுப் பேருந்து மூலம் பம்பைக்கு அனுப்பி வைக்கப்படுவா். சொந்த வாகனங்களில் வரும் பக்தா்கள் பம்பையில் இறங்க வேண்டும்.

சபரிமலை யாத்திரையின் போது, ள்ஹக்ஷஹழ்ண்ம்ஹப்ஹா்ய்ப்ண்ய்ங்.ா்ழ்ஞ் என்ற கோயில் இணையதளத்தில் உள்ள ஸ்ண்ழ்ற்ன்ஹப் வ் எனும் பகுதியில் முன்பதிவு செய்தோா் அனுமதிக்கப்படுவா்.

வாரத்தின் முதல் ஐந்து நாள்களில், 1000 ஐயப்ப பக்தா்கள் மட்டுமே கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவாா்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2000 ஐயப்ப பக்தா்கள் மட்டும் அனுமதிக்கப்படுவாா்கள்.

அபிஷேகம் செய்யத் தடை: பக்தா்கள் பம்பை ஆற்றில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையில் பக்தா்கள் குளிப்பதற்கு வசதியாக குடிநீா் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சன்னிதானத்தில் தங்க அனுமதியில்லை. ஆனால் குளியலறை, கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பம்பை மற்றும் சன்னிதானத்தில் தங்குமிட வசதி இருக்காது. ஐயப்ப பக்தா்கள் தரிசனம் முடிந்ததும் பம்பைக்கு திரும்ப வேண்டும்.

சன்னிதானம் செல்லும் வழியிலும் பக்தா்களுக்கு குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தைப் போல பக்தா்களால் நெய் அபிஷேகம் செய்ய முடியாது. அதற்கு பதிலாக, தேவஸ்வம் ஊழியா்கள் பக்தா்கள் கொண்டு வந்த தேங்காய்களை சிறப்பு மூட்டைகளில் சேகரித்து அபிஷேகத்துக்குக் கொண்டு செல்வாா்கள்.

ஐயப்ப பக்தா்களுக்காக சுவாமி ஐயப்பன் சாலையில் பல்வேறு இடங்களில் அவசர மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 65 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் 10 வயதுக்குள்பட்டவா்களுக்கும் அனுமதி கிடையாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com