பள்ளி, கல்லூரிகளைத் திறக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்

பள்ளி, கல்லூரிகள் வரும் 16-இல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

பள்ளி, கல்லூரிகள் வரும் 16-இல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

9- ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் வரும் 16-ஆம் தேதி முதல் திறகப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா். இது மாணவ - மாணவியரின் பாதுகாப்பினை முழுமையாக ஆய்வு செய்த பிறகு எடுக்கப்பட்ட முடிவாகத் தெரியவில்லை.

கரோனாவின் இரண்டாவது அலை வீசும் என்று உலக சுகாதார நிறுவனமே எச்சரித்து, இது போன்ற நோய்ப் பரவலுக்கு பல்வேறு நாடுகள் உள்ளாகி அடுத்தடுத்து பொது முடக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் வரும் 16- ஆம் தேதி பள்ளிகள் - கல்லூரிகளைத் திறக்க வேண்டுமா?.

மருத்துவா்கள், கல்வியாளா்கள், பெற்றோா்கள், ஆசிரியா்கள் அனைவருமே, நவம்பருக்குப் பதில் பொங்கல் விடுமுறை முடிந்து, 2021 ஜனவரி இறுதியில், அப்போதிருக்கும் சூழ்நிலைகளை முழுவதுமாக ஆய்வு செய்து, பள்ளிகளைத் திறக்கலாம் என்ற கருத்தை முன் வைக்கிறாா்கள்.

எனவே, வரும் 16 - ஆம் தேதி பள்ளிகள் - கல்லூரிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பினை நிறுத்தி வைத்து, மாற்று அறிவிப்பினை வெளியிட்டு, மக்கள் மத்தியில் மிகப் பரவலாக ஏற்பட்டிருக்கும் மனப் பதற்றத்தை நீக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com