நாமக்கல்லில் மின்வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பினர் போராட்டம்

நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், நாமக்கல் மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட மின்வாரிய தொழிற் சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று புதன்கிழமை ஒரு நாள் தர்
போராட்டத்தில் கலந்துகொண்ட மின்வாரிய பணியாளர்கள். 
போராட்டத்தில் கலந்துகொண்ட மின்வாரிய பணியாளர்கள். 

நாமக்கல்: நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், நாமக்கல் மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட மின்வாரிய தொழிற் சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று புதன்கிழமை ஒரு நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இதில் மின் வாரியத்தை தனியார்மயமாக்கல் கூடாது. மின் வாரிய தலைவர் பங்கஜ் குமார் பன்சால் தொழிற்சங்க நிர்வாகிகளை சந்தித்து பேச மறுக்கிறார். பொறியாளர்களின் கோரிக்கைகளை பற்றி எடுத்துரைக்க கூறினால் அனுமதிப்பதில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊதிய உயர்வு, போனஸ் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

ஈரோடு மின் வாரிய மண்டல பொறியாளர் சங்கத்தின் செயலாளர் ஆனந்த் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மின்வாரிய உதவிப் பொறியாளர்கள், அலுவலர்கள், கீழ் நிலை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com