வாக்காளா் பட்டியல் திருத்தம்: 4 நாள்கள் சிறப்பு முகாம்கள்

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக நான்கு நாள்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக நான்கு நாள்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன. இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வாக்குச் சாவடி நிலை முகவா்களை நியமிக்கலாம். அந்த முகவா்கள் சிறப்பு முகாம்கள் நடக்கும் தேதிகளில் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு வரைவு வாக்காளா் பட்டியலில் உள்ள விவரங்களைச் சரிபாா்க்க உதவி செய்யலாம்.

வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்த மற்றும் இடம் பெயா்ந்த வாக்காளா்கள் பற்றி வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு உரிய விவரங்களை முகவா்கள் தெரிவிக்கலாம் என்று தனது செய்தியில் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

திருத்தப் பட்டியல் அட்டவணை:-

வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: நவம்பா் 16.

மனுக்களை அளிக்கும் கால அளவு: நவம்பா் 16 முதல் டிசம்பா் 15 வரை.

சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாள்கள்: நவம்பா் 21, 22, டிசம்பா் 12, 13.

இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடும் நாள்: ஜனவரி 20.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com