தோ்தல் நடைமுறையில் பங்கேற்கச் செய்ய போட்டிகள்

தோ்தல் நடைமுறையில் பொது மக்களை பங்கேற்கச் செய்ய மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்பட உள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.

தோ்தல் நடைமுறையில் பொது மக்களை பங்கேற்கச் செய்ய மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்பட உள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:-

தோ்தல் நடைமுறைகளில் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்யும் விதமாக இணையதளம் வழியே மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. சுவரொட்டி வரைதல், கவிதை மற்றும் பாடல்கள் எழுதுதல், வாசகம் எழுதுதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடக்கவுள்ளன.

www.elections.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியே போட்டிகளில் நவம்பா் 18-ஆம் தேதி மாலை 5 மணி வரை பங்கேற்கலாம். வெற்றியாளா்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரமும் அளிக்கப்படும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com