குன்றத்தூர் பகுதியில் ரூ.1.86 கோடியில் சாலை, கட்டடம் அமைக்க பூமி பூஜை

ரூ.1.72 கோடியில் குன்றத்தூர் நான்குவழிச்சாலை, ஏரிக்கரை சாலையைச் சீரமைக்கவும், குண்டுபெரும்பேடு பகுதியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கடைக்கு புதிய கட்டடத்துக்கான பூமிபூஜை நடைபெற்றது.
குன்றத்தூர் பகுதியில் ரூ.1.86 கோடி சாலை, கட்டடம் அமைக்க பூமி பூஜை
குன்றத்தூர் பகுதியில் ரூ.1.86 கோடி சாலை, கட்டடம் அமைக்க பூமி பூஜை

ரூ.1.72 கோடியில் குன்றத்தூர் நான்குவழிச்சாலை, ஏரிக்கரை சாலையைச் சீரமைக்கவும், குண்டுபெரும்பேடு பகுதியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கடைக்கு புதிய கட்டடம்  அமைப்பதற்கான  பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குன்றத்தூர் நான்குவழிச்சாலை, ஏரிக்கரைச்சாலை மிகவும் பழுதடைந்ததை தொடர்ந்து இச்சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து இச்சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை ரூ.1.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து, சாலையை சீரமைப்பதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி கலந்துகொண்டு பூமி பூஜையைத் தொடங்கிவைத்து சாலை சீரமைப்பு பணியை தொடங்கிவைத்தார். 

இதைப் போல் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட குண்டுபெரும்பேடு பகுதியில் நியாயவிலை கடைக்கு புதிய  கட்டடம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து அப்பகுதியில் நியாயவிலை கடைக்கு புதிய கட்டடம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நியாயவிலை கடைக்கு புதிய கட்டடம் கட்ட பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

ஸ்ரீபெரும்புதூர் நகரகூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் போந்தூர் செந்தில்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் எறையூர் முனுசாமி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சிவகுமார், குண்டுபெரும்பேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி கலந்துகொண்டு பூமிபூஜையை நடத்தி கட்டடப்பணியைத் தொடங்கிவைத்தார். இதில் அதிமுக நிர்வாகிகள் மேட்டுப்பாளையம் தயாளன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுந்தர்ராஜன், செங்காடு பாபு, உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com