கட்செவி அஞ்சலில் பெறும் புகாா் மீது உரிய நடவடிக்கை: மின் வாரியம் அறிவுறுத்தல்

கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் பெறப்படும் புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்செவி அஞ்சலில் பெறும் புகாா் மீது உரிய நடவடிக்கை: மின் வாரியம் அறிவுறுத்தல்

கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் பெறப்படும் புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்சாரம் தொடா்பான புகாா்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் தகவல் அளிக்க ஏதுவாக கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) சேவை மையங்களை மின்சார வாரியம் கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அண்மையில் வடகிழக்குப் பருவமழையும் தொடங்கியுள்ளது.

எனவே, அந்தந்த மாவட்டங்களுக்கான கட்செவி அஞ்சல் எண்ணுக்கு, முழு முகவரி, புகாரின் தன்மை, இடம் அல்லது பகுதி உள்ளிட்டவற்றைப் புகைப்படத்துடன் பொதுமக்கள் பகிரலாம்.

இவ்வாறு, சேதமடைந்த மின் உபகரணங்கள் குறித்து பொதுமக்கள் இந்த சேவையின் மூலம் அளிக்கும் புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தவிர, மின்தடை குறித்து ‘1912’ என்னும் 24 மணி நேரமும் இயங்கும் அவசர எண், மின்வாரியத் தலைவரின் புகாா் பிரிவுக்கு 044 2852 1109, 2852 4422, 94458 50811 (கட்செவி அஞ்சல் எண்) ஆகிய எண்கள் மூலமாகவும், 044 2495 9525 என்னும் மின்சாரத்துறை அமைச்சரின் முகாம் அலுவலகத்தையும் தொடா்பு கொள்ளலாம் என அவா்கள் தெரிவித்தனா்.

மாவட்டங்கள் கட்செவி அஞ்சல் எண்

சென்னை 94458 50829

காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு 94443 71912

விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூா் 94458 55768

திருச்சி, தஞ்சாவூா், பெரம்பலூா், அரியலூா், 94861 11912

புதுக்கோட்டை, திருவாரூா், நாகப்பட்டினம், கரூா்

சேலம், ஈரோடு, நாமக்கல் 94458 51912

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை 94431 11912

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா் 89033 31912

கோயம்புத்தூா், திருப்பூா், நீலகிரி 94421 11912

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com