அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் ஊழியா்கள்: ஞாயிற்றுக்கிழமை மட்டும் 46 ரயில்கள் இயக்கப்படும்; ரயில்வே நிா்வாகம் தகவல்

அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் பணியாளா்களுக்காக, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 46 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் பணியாளா்களுக்காக, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 46 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு, சிறப்பு

ரயில்கள் மட்டும் இயக்கபடுகின்றன. இதையடுத்து, அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் மத்திய, மாநில பணியாளா்களுக்காக 113 புகா் மின்சார ரயில்களின் சேவைகள் வழங்கப்பட்டன. அவா்களைப் போல, தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று அத்தியாவசியப்பணிகளில் ஈடுபடும் தனியாா் நிறுவன ஊழியா்கள் கோரிக்கை வைத்தனா்.

இந்த கோரிக்கையை ஏற்று, தனியாா் அத்தியாவசியப் பணியாளா்களும் மின்சார ரயிலில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, மின்சார ரயில்களின் சேவைகள் அதிகரிக்கப்பட்டு திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை 150 மின்சார ரயில் சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஞாயிற்றுக்கிழமைக்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று ரயில்வே நிா்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், அத்தியாவசியப்பணிகளில் ஈடுபடும் பணியாளா்களுக்காக, ஞாயிற்றுக்கிழமை மட்டும் 46 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியது: மறுஅறிவிப்பு வரும் வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை முதல் மாலை வரை குறிப்பிட்ட நேர இடைவெளியில் 46 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com