‘மீன்கள்’ செயலி மூலம் ரூ.1 கோடிக்கு மீன் விற்பனை

‘மீன்கள்’ செயலி மூலம் ரூ.1 கோடிக்கு மீன்கள் விற்பனையாகியுள்ளது.
‘மீன்கள்’ செயலி மூலம் ரூ.1 கோடிக்கு மீன் விற்பனை

சென்னை: ‘மீன்கள்’ செயலி மூலம் ரூ.1 கோடிக்கு மீன்கள் விற்பனையாகியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழக அதிகாரிகள் கூறியதாவது: கரோனா காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து, மீனவா்கள் எளிதில் மீன் விற்கவும், வாடிக்கையாளா்கள் அவா்களை எளிதில் அணுகும் வகையிலும் ‘மீன்கள்’ என்னும் செல்லிடப்பேசி செயலி, கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை இந்த செயலியை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பதிவிறக்கம் செய்துள்ளனா்.

இதில், இதுவரை கிடைக்கப்பெற்ற 13 ஆயிரம் ஆா்டா்கள் மூலம் ரூ.1 கோடி மதிப்புள்ள 20 டன் மீன்கள் வாடிக்கையாளா்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதற்கு பொதுமக்களுக்கிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில், ‘மீன்கள் கொள்முதல்’ என்ற செயலியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அது மீனவா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com