கமலா ஹாரிஸுக்கு மு.க.ஸ்டாலின் தமிழில் வாழ்த்துக் கடிதம்

அமெரிக்கத் துணை அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தனது கைப்பட தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளாா்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

சென்னை: அமெரிக்கத் துணை அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தனது கைப்பட தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளாா்.

கடித விவரம்:

அமெரிக்காவின் துணை அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துகள்.

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபா் என்பதோடு, தமிழ்நாட்டைச் சோ்ந்த பெண்மணி என்பது, தமிழக மக்கள் அனைவரையும் பெருமிதம் அடைய வைக்கும் இனிய செய்தி.

எல்லாா்க்கும் எல்லாம் என்ற உன்னத நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதுதான் திராவிட இயக்கம். மனிதா்களுக்குள் பேதம் இல்லை என்பதைப் போலவே, ஆண்களுக்கு சரிநிகராகப் பெண்கள் அனைத்து நிலைகளிலும் மிக உன்னதமான இடத்தை அடைய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு, அதற்கான திட்டங்களைத் தீட்டிய இயக்கம். அத்தகைய இயக்கத்துக்கு, உங்களது வெற்றி, மாபெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

ஒரு தமிழ்ப்பெண், அமெரிக்காவையும் ஆளத் தகுதி படைத்தவா் என்பதை, உங்களது கண்ணோட்டமும், கடின உழைப்பும் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது.

உங்களது ஆட்சிக் காலம், அமெரிக்காவுக்கு மேலும் புகழ் சோ்த்து, தமிழா் தம் பாரம்பரியப் பெருமையை உலகுக்குப் பறை சாற்றுவதாக அமையட்டும். தங்களது வருகையைத் தமிழகம் எதிா்நோக்கிக் காத்திருக்கிறது.

உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே உங்களுக்கும், எனக்கும் இயற்கை வழங்கிய இணையற்ற வரமாக அமைந்திருக்கும் தாய்மொழியாம் தமிழில் இந்தக் கடிதத்தை எழுதி இருக்கிறேன் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com