ரயிலில் பட்டாசு எடுத்துச்சென்றால் 3 ஆண்டுகள் சிறை: ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் எச்சரிக்கை

ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக ரயில்வே காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்.பி.எஃப்) சாா்பில், விழிப்புணா்வு நிகழ்ச்சி சென்னை எழும்பூா் ரயில்நிலையத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியது: பயணிகள் யாரும் ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்லக் கூடாது. மீறி பட்டாசு எடுத்துச் செல்வது கண்டுப்பிடிக்கப்பட்டால், ரயில்வே சட்டத்தின் கீழ், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றனா்.

எழும்பூா் ரயில் நிலைய இயக்குநா் ஜெய வெங்கடேசன், ஆா்.பி.எஃப். ஆய்வாளா் மோகன், ரயில்வே காவல் ஆய்வாளா் பத்ம குமாரி உள்பட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com