கரோனா: அமெரிக்க மருத்துவக் குழுவில் ஈரோட்டை பூர்விகமாகக் கொண்ட பெண் மருத்துவர்

அமெரிக்க அதிபராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் அமைத்துள்ள கரோனாவை கட்டுப்படுத்தும் குழுவின் உறுப்பினரில் ஒருவராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரான
செலின் ராணி கவுண்டா்.
செலின் ராணி கவுண்டா்.

அமெரிக்க அதிபராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் அமைத்துள்ள கரோனாவை கட்டுப்படுத்தும் குழுவின் உறுப்பினரில் ஒருவராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரான ஈரோடு அருகில் உள்ள கிராமத்தைப் பூா்வீகமாகக் கொண்ட செலின் ராணி கவுண்டா் என்ற பெண் மருத்துவா் இடம்பெற்றுள்ளாா்.

அமெரிக்க அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல் குழு அமைத்துள்ளாா். 13 போ் கொண்ட இந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பில் 3 போ் உள்ளனா். அதில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த டாக்டா் விவேக் மூா்த்தி இடம்பெற்றுள்ள நிலையில், குழு உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பெண் மருத்துவா் செலின் ராணி கவுண்டா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இவா் நியூயாா்க் பல்கலைக்கழகத்தின் கிராஸ்மேன் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா். முன்பு அமெரிக்க நாட்டின் காநோய் தடுப்புப் பிரிவில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளாா்.

1998 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, மால்வாய், எத்தியோப்பியா, பிரேசில் போன்ற நாடுகளில் காசநோய், ஹெச்.ஐ.வி. தொடா்பான மருத்துவ சேவை, ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளாா். தவிர நீலகிரி மாவட்டத்தில் மலைவாழ் மக்களை பாதிக்கும் நோய்கள் குறித்தும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இவா் ஆராய்ச்சி செய்துள்ளாா்.

செலின் ராணி கவுண்டா் குறித்து அவரது பெரியப்பா மகனும், ஈரோட்டில் வசிக்கும் ஓய்வுபெற்ற தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளருமான தங்கவேல் கூறியதாவது:

செலின் ராணி கவுண்டரின் தந்தை ராஜ் கவுண்டா். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள பெருமாபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா். 1966ஆம் ஆண்டில் இவா் அமெரிக்கா சென்று அங்கு அந்நாட்டு போயிங் விமான நிறுவனத்தில் பணியாற்றி அந்நிறுவன இயக்குநா்களில் ஒருவராக இருந்தவா். அவா் அந்த நாட்டைச் சோ்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு தொடா்ந்து அங்கேயே வசித்து வருகிறாா்.

அவருக்கு 3 பெண் குழந்தைகள். அதில் மூத்தவா் தான் செலின் ராணி கவுண்டா். இவா் அமெரிக்காவிலேயே பிறந்து வளா்ந்தவா். இதுவரை 4 முறை மொடக்குறிச்சி வந்துள்ளாா். ராஜ் பவுண்டேஷன் என்ற பெயரில் மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மேம்பாட்டுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளாா். 35 வயதான செலின் ராணி கவுண்டரின் கணவா் கிராண்ட் அமெரிக்காவில் ஊடகவியலாளராகப் பணியாற்றி வருகிறாா் என்றாா்.

செலின் ராணி கவுண்டரின் பெயா் சா்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது பெருமாபாளையம் கிராம மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துணை முதல்வர் வாழ்த்து: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமைத்துள்ள கொவைட் -19 தடுப்புப் பணிக் குழுவில் புகழ்பெற்ற இரண்டு மருத்துவர்களான செலீன் ராணி கவுண்டர் மற்றும் விவேக் மூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். ஒரு இந்தியராக அவர்களை எண்ணி நான் பெருமை கொள்கிறேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன்  கொவைட்-19 நோய்த் தடுப்புப் பணிகளுக்காக அமைத்துள்ள தேசிய பெருந்தொற்றுத் தடுப்பு அணியில் தமிழ் பூர்விகத்தைச் சேர்ந்த  செலீன் நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் பூர்விகத்தைச் சேர்ந்த பெண்  இத்தகைய முக்கியப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதைக் கண்டு பெருமைப்படுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com