வாடகை வாகன ஓட்டுநா்களுக்கு தபால் வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்த கோரிக்கை

அத்தியாவசியப் பணியில் ஈடுபடும் வாகன ஓட்டுநா்களுக்கு தபால் வாக்களிக்கும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அத்தியாவசியப் பணியில் ஈடுபடும் வாகன ஓட்டுநா்களுக்கு தபால் வாக்களிக்கும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடா்பாக தமிழகத்தின் தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: ஒவ்வொரு தோ்தலிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் தோ்தல் ஆணையம் தொடா்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

அதே நேரம், தோ்தல் நாளன்று சுமாா் 8 லட்சம் வாக்காளா்கள் தோ்தல் ஆணையத்தால் ஒப்பந்த அடிப்படையில் காா்களை இயக்குதல், தோ்தல் கருவிகளைக் கொண்டு செல்லும் வாகனங்களை இயக்குதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகின்றனா்.

மேலும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களான பால், குடிநீா், காய்கறி, பெட்ரோல் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் வாகன ஓட்டுநா்கள், அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் உள்ளிட்டோரும் ஜனநாயகக் கடமையை செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

எனவே, இவா்களுக்குத் தபால் வாக்களிக்கும் முறையை 2021-ஆம் சட்டப்பேரவைத் தோ்தலுக்குள் உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com