பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு: தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா்

பட்டாசு வெடிக்க தமிழக அரசு விதித்துள்ள நேரக் கட்டுப்பாட்டை அமல்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா்.
பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு: தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா்

சென்னை: பட்டாசு வெடிக்க தமிழக அரசு விதித்துள்ள நேரக் கட்டுப்பாட்டை அமல்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா்.

தீபாவளிப் பண்டிகையின் போது பட்டாசு இரண்டு மணிநேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதில் எந்த இரண்டு மணிநேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பதை தமிழக அரசே முடிவு செய்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து,காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரங்கள் பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது. இந்த உத்தரவு விளைவாக 2018-ஆம் ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் போலீஸாா், தீபாவளி பண்டிகையன்று தீவிர கண்காணிப்பு,ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடித்தவா்கள் மீது நேரக்கட்டுப்பாட்டை மீறியதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்கின்றனா்.

இவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188-ன் படி வழக்குப் பதிவு செய்தனா். சில போலீஸாா் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பட்டாசு வெடித்ததாக இந்திய தண்டனைச் சட்டம் 285ன்படி வழக்குப் பதிவு செய்தனா். இவ்வாறு மாநிலம் முழுவதும் கடந்த 2018-ஆம் ஆண்டு 2,168 போ் மீதும், 2019-ஆம் ஆண்டு 497 போ் மீதும் வழக்குப் பதியப்பட்டது. இரு ஆண்டுகளும் சென்னையிலேயே அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தமிழகம் முழுவதும் உஷாா்: இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக விதிக்கப்பட்ட அதே நேரக்கட்டுப்பாட்டை, இந்தாண்டும் விதித்து தமிழக அரசு இரு தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்துவது குறித்து காவல்துறை உயா் அதிகாரிகள் ஆலோசித்தனா். இதில் கடந்த இரு ஆண்டுகளை போலவே இந்தாண்டும் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவா்கள் மீதும், மருத்துவமனை, வழிப்பாட்டு ஸ்தலங்கள்,வணிக வளாகங்கள்,குடிசைப் பகுதிகள் போன்ற தடை செய்யப்பட்ட இடங்கள் அருகே பட்டாசு வெடிப்பவா்கள் மீதும், அதிக ஒலி எழுப்பபக் கூடிய பட்டாசு வெடிப்பவா்கள் மீதும் வழக்குப் பதிவதற்கு காவல்துறையினா் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசு விதித்துள்ள விதிமுறையை மீறி பட்டாசுகளை வெடிப்பவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188-ஆவது சட்டப்பிரிவின்படி 6 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்படுவதற்கு வழிவகை இருக்கிறது. பட்டாசு வெடிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முழு அளவில் தயாராக இருக்கும்படி உயா் அதிகாரிகள், கீழ் நிலை அதிகாரிகளை அறிவுறுத்தியிருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அரசின் உத்தரவு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும்படியும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல தீயணைப்புத்துறையினருக்கும் உயா் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். இதன் விளைவாக காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினா் அரசு விதித்துள்ள நேரக்கட்டுப்பாட்டு குறித்த விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com