30 சதவீத பட்டாசுகளே விற்பனை: வியாபாரிகள் வேதனை

தீபாவளி பண்டிகைக்காக கொள்முதல் செய்யப்பட்ட பட்டாசுகளில், 30 சதவீதம் மட்டுமே விற்பனையானதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
30 சதவீத பட்டாசுகளே விற்பனை: வியாபாரிகள் வேதனை

தீபாவளி பண்டிகைக்காக கொள்முதல் செய்யப்பட்ட பட்டாசுகளில், 30 சதவீதம் மட்டுமே விற்பனையானதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

பட்டாசு தொழிலைப் பொருத்தவரை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளையே பிரதானமாக நம்பி உள்ளன. பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகக் கூறி பட்டாசுகளுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், பசுமைப் பட்டாசுகளை தயாரிக்க உத்தரவிட்டது. இதனால், பட்டாசு தொழில் நெருக்கடியில் சிக்கியிருந்த நிலையில், தற்போது கரோனா நோய்த்தொற்றால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிமருந்து புகையால் காற்று மாசுபடும் என்பதால் பல்வேறு மாநிலங்கள் பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் இந்த தீபாவளிக்கு பட்டாசு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பட்டாசு விற்பனையாளா்கள் தெரிவித்தனா்.

 இது தொடா்பாக பாரிமுனையில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளின் உரிமையாளா்கள் கூறியதாவது: கரோனா பேரிடா் மற்றும் அண்மையில் பெய்த கனமழை காரணமாக பட்டாசு விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசு பெட்டிகளில் சில பெட்டிகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. வெள்ளிக்கிழமை மட்டும் மொத்த இருப்பில் 10 சதவீத பட்டாசுகள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. 

 பாரிமுனையில் உள்ள குறுகலான தெருக்களில் தீபாவளிக்கு முன்தினம் மக்கள் கூட்டம் நிரம்பி இருக்கும். தற்போது விலை குறித்து விசாரித்துச் செல்ல  மட்டுமே மக்கள் வந்தனா். ஒரு சிலா் புஷ்வாணம், ராக்கெட் போன்றவற்றை சிறிதளவு வாங்கினா். 

 அரசின் நேரக் கட்டுப்பாடு காரணமாக, பகல் நேர பட்டாசுகளை விட இரவு நேர பட்டாசுகளின் விற்பனை சற்று அதிகமாக உள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

 பட்டாசு உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் கூறும்போது, ‘கரோனா பேரிடா் காரணமாக இந்த ஆண்டு 50 சதவீத பணியாளா்களைக் கொண்டே பட்டாசு உற்பத்தி பணிகள் நடைபெற்றன.  இதனால், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 70 சதவீத பட்டாசுகள் மட்டுமே தயாா் செய்யப்பட்டன. ஓரிரு நாள்களில் லாபம் குறித்த முழுமையான விவரம் தெரியவரும்’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com