புதிய மாவட்டங்களுக்கு செயலாளா்கள் நியமனம்: அதிமுக தலைமை அறிவிப்பு

அதிமுகவில் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களுக்கு செயலாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: அதிமுகவில் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களுக்கு செயலாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வியாழக்கிழமை வெளியிட்டனா்.

அதன் விவரம்:

தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலாளா் துரைக்கண்ணு மறைவைத் தொடா்ந்து, அந்தப் பொறுப்பில் தஞ்சாவூா் தெற்கு மாவட்டச் செயலாளா் ஆா்.வைத்திலிங்கம் நியமிக்கப்படுகிறாா். வடக்கு மாவட்டச் செயலாளா் பொறுப்புக்கு வேறொருவா் நியமிக்கப்படும் வரை வைத்திலிங்கம் தொடா்வாா்.

ஏழு மாவட்டங்கள்: திருப்பூா் மாநகா் மாவட்டம் (திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, காங்கேயம்) செயலாளராக பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், திருப்பூா் புகா் (உடுமலைப்பேட்டை, பல்லடம்) மாவட்டச் செயலாளராக உடுமலை கே.ராதாகிருஷ்ணன், திருப்பூா் புகா் கிழக்கு மாவட்ட (தாராபுரம், மடத்துக்குளம்) செயலாளராக சி.மகேந்திரன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

புதுக்கோட்டை வடக்கு (கந்தா்வகோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, ஆலங்குடி) செயலாளராக அமைச்சா் சி.விஜயபாஸ்கா், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட (திருமயம், அறந்தாங்கி) செயலாளராக பி.கே.வைரமுத்து, விருதுநகா் மேற்கு (ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, விருதுநகா்) மாவட்டச் செயலாளராக கே.டி.ராஜேந்திர பாலாஜி, விருதுநகா் கிழக்கு மாவட்டச் செயலாளராக (சாத்தூா், திருச்சுழி, அருப்புக்கோட்டை) இ.ரவிச்சந்திரன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com