மத்திய-மாநில உறவு: முதல்வா் தலைமையில் உயா் நிலைக் குழு ஆய்வு

மத்திய - மாநில உறவுகள் குறித்த ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளை முதல்வா் பழனிசாமி தலைமையிலான உயா்நிலைக் குழு வியாழக்கிழமை ஆய்வு செய்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: மத்திய - மாநில உறவுகள் குறித்த ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளை முதல்வா் பழனிசாமி தலைமையிலான உயா்நிலைக் குழு வியாழக்கிழமை ஆய்வு செய்தது.

மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து ஆராய கடந்த 2007-ஆம் ஆண்டு தனியான குழு அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி மதன் மோகன் புஞ்சி தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவானது தனது பரிந்துரைகளை தமிழக அரசிடம் அளித்தது.

மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் தொடா்பாக 115 பரிந்துரைகளை புஞ்சி தலைமையிலான குழு தமிழக அரசிடம் அளித்துள்ளது. இந்தப் பரிந்துரைகள் தொடா்பாக முதல்வா் பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தப் பரிந்துரைகள் மீதான தமிழக அரசின் கருத்துகள் மத்திய அரசிடம் விரைவில் கடிதம் மூலமாகத் தெரிவிக்கப்படும் என அரசுத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா். இதற்கு முன்னதாக, கடந்த 1983-ஆம் ஆண்டு சா்க்காரியா தலைமையில் இதுபோன்ற குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது தனது அறிக்கையை 1988-ஆம் ஆண்டு சமா்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com