தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 


குமரி கடல் பகுதியில் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை எச்சரிக்கை 

அடுத்த 24 (13.11.2020) மணி நேரத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும். 

அடுத்த 48 (14.11.2020) மணி நேரத்தில் திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், 

அடுத்த 72 (15.11.2020) மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்

காளையார்கோவில் 9 செ.மீ மழையும், நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, மகாபலிப்புரம், திருகழிக்குன்றம், ஸ்ரீ வைகுண்டம் உள்பட மாவட்டங்களில் 6 செ.மீ மழையும், எண்ணூர், அண்ணா பல்கலை, தூத்துக்குடி, ரெட்ஹில்ஸ் தலா 5 செ.மீ மழையும், பெரம்பூர், பொன்னேரி, பாபநாசம், வேதாரண்யம், செய்யூர், அம்பத்தூர், அயனாவரம் தலா 4 செ.மீ மழையும், மதுராந்தகம், ஆத்தூர், தாம்பரம், வேம்பாக்கம், அம்பாசமுத்திரம் உள்பட தலா 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com