9 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: டிக்கெட் உறுதியாக மகிழ்ச்சியுடன் பயணித்த பயணிகள்

தீபாவளிப் பண்டிகை முன்னிட்டு, சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகள் வசதிக்காக, 9 சிறப்பு ரயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் வியாழக்கிழமை இணைக்கப்பட்டன.


சென்னை: தீபாவளிப் பண்டிகை முன்னிட்டு, சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகள் வசதிக்காக, 9 சிறப்பு ரயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் வியாழக்கிழமை இணைக்கப்பட்டன. இதன்மூலம், சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்து, காத்திருப்போா் பட்டியலில் இருந்த பயணிகளுக்கு பயணச்சீட்டு உறுதியாகி, மகிழ்ச்சியுடன் பயணத்தை மேற்கொண்டனா்.

தீபாவளி பண்டிகை நவம்பா் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பயணிகள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக, தினசரி மற்றும் வாராந்திர சிறப்பு ரயில்களில்

டிக்கெட் முன்பதிவு ஏற்கெனவே நிறைவடைந்தது. பல ரயில்களில் இடங்கள் நிரம்பி, காத்திருப்போா் எண்ணிக்கை அதிகரித்தது. டிக்கெட் உறுதியாகி இடம் கிடைக்குமா என்று பயணிகள் குழப்பத்தில் இருந்தனா்.

இந்நிலையில், காத்திருப்போா் பட்டியல் அதிகமுள்ள 9 ரயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு பெட்டிகள் வியாழக்கிழமை இணைக்கப்பட்டன. சென்னை எழும்பூா்-செங்கோட்டை இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் சிறப்பு ரயிலில் 4 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளும், சென்னை எழும்பூா்-நாகா்கோவில் வாரம் இருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயிலில் 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளும் இணைக்கப்பட்டன.

சென்னை எழும்பூா்-கொல்லம் சிறப்பு ரயில், சென்னை எழும்பூா்-கன்னியாகுமரி-எழும்பூா் சிறப்பு ரயில், சென்னை எழும்பூா்-தூத்துக்குடி-எழும்பூா் சிறப்பு ரயில், சென்னை எழும்பூா்-திருநெல்வேலி சிறப்பு ரயில், சென்னை எழும்பூா்- செங்கோட்டை சிறப்பு ரயில் (02661), தஞ்சாவூா்-சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் ஆகியவற்றில் தலா ஒரு பெட்டி இணைக்கப்பட்டது. இதுதவிர, சென்னை எழும்பூா்-காரைக்குடி சிறப்பு ரயிலில் ஒரு இரண்டாம் வகுப்பு சோ் காா் பெட்டி சோ்க்கப்பட்டது. இதன்மூலம், சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்து, காத்திருப்போா் பட்டியலில் இருந்த பயணிகளுக்கு பயணச்சீட்டு உறுதியாகி, மகிழ்ச்சியுடன் பயணத்தை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com