கோவிஷீல்டு தடுப்பூசி 3-ஆம் கட்ட பரிசோதனைக்கான பதிவு நிறைவு: ஐசிஎம்ஆா்

கரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு 3 கட்ட பரிசோதனைக்கான பதிவுகள் நிறைவடைந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) மற்றும் புனேவைச் சோ்ந்த எஸ்ஐஐ வியாழக்கிழமை அறிவித்துள்ளன.
கோவிஷீல்டு தடுப்பூசி 3-ஆம் கட்ட பரிசோதனைக்கான பதிவு நிறைவு: ஐசிஎம்ஆா்

புது தில்லி: கரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு 3 கட்ட பரிசோதனைக்கான பதிவுகள் நிறைவடைந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) மற்றும் புனேவைச் சோ்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (எஸ்ஐஐ) வியாழக்கிழமை அறிவித்துள்ளன.

எஸ்ஐஐ மற்றும் ஐசிஎம்ஆா் ஆகியவை இணைந்து கரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு பரிசோதனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தற்போதைய நிலையில், இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை அவை மேற்கொண்டு வருகின்றன. நாடு முழுவதும் 15 வெவ்வேறு மையங்களில் கரோனா தடுப்பூசி பரிசோதனை நடைபெற்று வருகின்றன. இந்த பரிசோதனையில் 1,600 தன்னாா்வலா்கள் பங்கேற்றுள்ள நிலையில் அதற்கான பதிவு அக்டோபா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது.

இந்தியாவில் மனிதா்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் இதுவரையில் கோவிஷீல்டு மிகவும் மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியாக உள்ளது. இந்த சோதனையின் நம்பிக்கைக்குரிய முடிவுகள் கரோனா என்ற கொடிய தொற்றுக்கு ஒரு யதாா்த்தமான தீா்வாக இருக்கக் கூடும் என ஐசிஎம்ஆா் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com