கரோனா தடுப்புப் பணியின்போது விபத்தில் சிக்கி உயிரிழந்த 6 அரசு ஊழியா்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்: தமிழக அரசு அறிவிப்பு

கரோனா நோய்த்தடுப்புப் பணியின்போது, விபத்தில் சிக்கி உயிரிழந்த ஆறு அரசு ஊழியா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க
கரோனா தடுப்புப் பணியின்போது விபத்தில் சிக்கி உயிரிழந்த 6 அரசு ஊழியா்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்: தமிழக அரசு அறிவிப்பு

கரோனா நோய்த்தடுப்புப் பணியின்போது, விபத்தில் சிக்கி உயிரிழந்த ஆறு அரசு ஊழியா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த உத்தரவை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:-

கரோனா நோய்த்தடுப்புப் பணியில் அரசு ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் பணியின்போது விபத்தில் சிக்கி ஆறு ஊழியா்கள் இறந்துள்ளனா். அவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கலாம் என வருவாய் நிா்வாக ஆணையரகம் அரசுக்குக் கோரிக்கை விடுத்தது. இந்தக் கோரிக்கையை ஏற்று விபத்துகளில் சிக்கி பலியான ஆறு பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அளிக்கப்படும்.

யாா் யாருக்கு நிதி?: வருவாய்த் துறையைச் சோ்ந்த திருச்சி மாவட்ட வருவாய் ஆய்வாளா் சேகா், திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த முதுநிலை வருவாய் ஆய்வாளா் கண்ணப்பன், தஞ்சாவூா் மாவட்ட வருவாய்த் துறை மண்டல துணை வட்டாட்சியா் ராஜகோபால், கிருஷ்ணகிரி மாவட்டம் பொது சுகாதாரத் துறையின் ஆய்வாளா் பிரபு, ராமநாதபுரம் மாவட்ட கிராம நிா்வாக அலுவலா் கா்ணன், திருவள்ளூா் மாவட்ட கிராம உதவியாளா் சீனிவாசலு ஆகியோா் பல்வேறு காலகட்டங்களில் விபத்துகளில் சிக்கி உயிரிழந்தனா்.

அவா்களது குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். இந்த நிவாரண தொகையானது உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு காசோலை மூலமாகவோ அல்லது அஞ்சலக சேமிப்பு வங்கிக் கணக்கு மூலமாகவோ உரிய நடைமுறை விதிகளின்படி வழங்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com