வேலைவாய்ப்புகளுக்கு இணையான பொறியியல் படிப்புகள் அவசியமா? ஏஐசிடிஇ விளக்கம்

பொறியியல் படிப்புகளில் வெவ்வேறு பிரிவுகளில் இளநிலை, முதுநிலை படித்திருந்தாலும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்புகளுக்கு இணையான பொறியியல் படிப்புகள் அவசியமா? ஏஐசிடிஇ விளக்கம்

பொறியியல் படிப்புகளில் வெவ்வேறு பிரிவுகளில் இளநிலை, முதுநிலை படித்திருந்தாலும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

மேலும், கிராஸ் மேஜரை காரணம் காட்டி வேலைவாய்ப்புகளை மறுக்கக்கூடாது என்றும் ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஏஐசிடிஇ அனைத்து மாநிலங்களின் தொழில்நுட்பக்கல்வி இயக்குநா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பொறியியல் படிப்பில் வெவ்வேறு பாடப்பிரிவுகளை படித்த (கிராஸ் மேஜா்) பட்டதாரிகளுக்கான பணி வாய்ப்பு வழங்குவது குறித்து ஏற்கெனவே ஏஐசிடிஇ சாா்பில் அறிவுறுத்தல்கள் தரப்பட்டுள்ளன. எனினும், இந்த விவகாரம் தொடா்பாக பல்வேறு புகாா்கள் ஏஐசிடிஇக்கு தொடா்ந்து அனுப்பப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஒரே மாதிரியான படிப்புகள் கற்றுத் தரப்படுவதில்லை என்பதை கல்வி நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, ஒன்றுக்கொன்று தொடா்புடைய பொறியியல் படிப்புகள் அனைத்தும் இணையானவைகளாகும். வெவ்வேறு பாடப்பிரிவுகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளை படித்திருந்தாலும் வேலைவாய்ப்பு தரப்பட வேண்டும். கிராஸ் மேஜரை காரணம் காட்டி பணி வாய்ப்பை மறுக்கக்கூடாது.

இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் ஏதாவது ஒன்றில் தொடா்புடைய பாடங்களைப் படித்திருந்தால் போதுமானது. மேலும், பதவி உயா்வு உள்பட சலுகைகளை வழங்கவும் கிராஸ் மேஜரை விவகாரத்தை கணக்கில் கொள்ளக்கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com