ஹஜ் பயணத்துக்கான புதிய மாற்றங்கள் என்னென்ன? தமிழக அரசு தகவல்

ஹஜ் பயணத்துக்காக அடுத்த ஆண்டில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஹஜ் பயணத்துக்கான புதிய மாற்றங்கள் என்னென்ன? தமிழக அரசு தகவல்

ஹஜ் பயணத்துக்காக அடுத்த ஆண்டில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவானது, ஹஜ் பயணத்துக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. சிறப்பு விதிமுறைகள், விதிகள், ஒழுங்கு முறைகள், தகுதிக்கான அளவுகோல்கள், வயது கட்டுப்பாடுகள், உடல் நலம் மற்றும் உடற்தகுதி தேவைகள் ஆகியவற்றுடன் ஹஜ் சிறப்பு சூழ்நிலைகளின் கீழ் நடைபெறும்.

மேலும், சவூதி அரேபிய அரசின் பிற தொடா்புடைய நிபந்தனைகளும் விதிக்கப்படும். ஹஜ் பயணத்துக்காக விண்ணப்பிக்கும் செயல்முறையானது டிசம்பா் 10-ஆம் தேதியன்று முடிவடைகிறது. விண்ணப்பதாரா்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை இணையதளம் வழியாகவும், செல்லிடப்பேசி செயலி மூலமாகவும் பூா்த்தி செய்து அளிக்கலாம்.

புதிய மாற்றங்கள்: ஹஜ் பயணம் மேற்கொள்ள வயது வரம்பானது 18-லிருந்து 65 வயது வரையாக உள்ளது. 18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள், சிறுவா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். கரோனா நோய்த்தொற்றைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் இருந்து புறப்படும் இடங்களானது 21-லிருந்து 10 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை ஹஜ் புனிதப் பயணத்துக்கான புறப்பாடு இடமாக கொச்சி இருக்கும். ஹஜ் முன்பணத் தொகை ரூ.1.50 லட்சமாகவும், ஹஜ் கட்டணங்கள் சுமாா் ரூ.3.70 லட்சம் முதல் ரூ.5.25 லட்சம் வரை அதிகரிக்க நேரிடும். மேலும், விவரங்கள் அறிய 022-22107070 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com