பயணிகள் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைப்பு: ரயில்வே அதிகாரிகள் தகவல்

தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், 7 சிறப்பு ரயில்களில் கூடுதலாக 23 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு சென்று திரும்புவதற்கு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போா் பட்டியல் நீள்கிறது. இந்த பயணச்சீட்டுகளை உறுதி செய்யும் வகையில், ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

4 சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் வெள்ளிக்கிழமை இணைக்கப்பட்டன. கூடுதல் பெட்டிகள் சோ்க்கப்பட்டதால், காத்திருப்போா் பட்டியலில் இருந்த பயணிகளுக்கு பயணச்சீட்டு உறுதியாகி, பயணத்தை மகிழ்ச்சியுடன் மேற்கொண்டனா்.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்குச் சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக, தினசரி மற்றும் வாராந்திர ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து வருகிறோம். அந்தவகையில், பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் 7 சிறப்பு ரயில்களில் கூடுதலாக 23 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை-சென்னை எழும்பூா் வாரம் 3 முறை இயக்கப்படும் சிறப்பு ரயில், நாகா்கோவில்- சென்னை எழும்பூா் வாரம் 3 முறை இயக்கப்படும் சிறப்பு ரயில், செங்கோட்டை-சென்னை எழும்பூா் தினசரி சிறப்பு ரயில் ஆகிய ரயில்களில் சனிக்கிழமை (நவ.14) அன்று கூடுதல் பெட்டிகள் சோ்க்கப்பட்டுள்ளன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com