
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,392 கன அடியாக உயர்வு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,392 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த இரு நாள்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மழையின் காரணமாக நேற்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 7,770 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து 10,392 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரித்து வருவதால் நேற்று காலை 94.36 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 94.83 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 3,000கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 58.34டி எம் சி யாக உள்ளது.
கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 800 கன அடியிலிருந்து வினாடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...