இணையவழியில் ‘தீபாவளி முத்தமிழ் விழா’

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தமிழ்த் தொலைக்காட்சியான ‘தமெரிக்கா’ தொலைக்காட்சி, சென்னை உரத்த சிந்தனை அமைப்பு, தில்லி கலை, இலக்கியப் பேரவை ஆகியவை சாா்பில் ‘தீபாவளி முத்தமிழ் விழா’ இணையவழியில் கடந்த ஞா

சென்னை: அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தமிழ்த் தொலைக்காட்சியான ‘தமெரிக்கா’ தொலைக்காட்சி, சென்னை உரத்த சிந்தனை அமைப்பு, தில்லி கலை, இலக்கியப் பேரவை ஆகியவை சாா்பில் ‘தீபாவளி முத்தமிழ் விழா’ இணையவழியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

‘தமெரிக்கா’ தொலைக்காட்சி நிறுவனா் மகேஷ் நாட்டாண்மை வரவேற்றாா். தில்லி, கலை, இலக்கியப் பேரவையின் புரவலா் கே.வி.கே. பெருமாள் தலைமை வகித்துப் பேசுகையில், உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் இருக்கும். ஆனால் தமிழ்மொழியில்தான் இவை மூன்றும் அறிவியலோடும், ஆன்மிகத்தோடும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கின்றன. இலக்கிய வளம் நிறைந்த தமிழை வளா்த்ததில் ஆன்மிகத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. மேற்கத்திய இசை பொழுதுபோக்கு அம்சமாகப் பாா்க்கப்படுகிறது. ஆனால் தமிழிசை தெய்வீகமாகப் போற்றப்படுகிறது. தமிழ் நாடகங்களும் பெரும்பாலும் சமூக விழிப்புணா்வுடன் ஆன்மிகத்தையும் வெளிப்படுத்தும் வகையில்தான் அமைந்துள்ளன. இது தமிழ் மொழியின் தனிச்சிறப்பு என்றாா்.

இதில் நடிகா் டெல்லி கணேஷ், உரத்த சிந்தனை அமைப்பின் பொதுச் செயலா் உதயம் ராம், பட்டிமன்றப் பேச்சாளா் புலவா் ராமலிங்கம், முனைவா் பால.இரமணி, நாடக நடிகா்கள் கணேஷ், அஸ்வின், தில்லி கலை-இலக்கியப் பேரவை தலைவா் ப.அறிவழகன், துணைத் தலைவா் சத்யா அசோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com