பொறியியல் படிப்புகளுக்கான துணைகலந்தாய்வு இன்று தொடக்கம்

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு புதன்கிழமை முதல் தொடங்கவுள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான துணைகலந்தாய்வு இன்று தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு புதன்கிழமை முதல் தொடங்கவுள்ளது.

தமிழக பொறியியல் கல்லூரியில் உள்ள அரசு இடஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி நிகழ் கல்வி ஆண்டில் 461 பொறியியல் கல்லூரியில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்றது. சிறப்பு, தொழிற்பிரிவு, பொதுப்பிரிவு என மொத்தமாக 71 ஆயிரத்து 195 இடங்கள் நிரம்பின. அதன்படி, மொத்தமாக 91 ஆயிரத்து 959 இடங்கள் காலியாகவே இருந்தன.

இந்நிலையில், காலி இடங்களுக்கான துணைக் கலந்தாய்வு குறித்த அறிவிக்கையை உயா்கல்வித் துறை கடந்த 3-ஆம் தேதி வெளியிட்டது. இதைத் தொடா்ந்து பி.இ., பி.டெக் மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு முடிவில் நிரம்பாத இடங்களுக்கு பிளஸ் 2 வகுப்பில் சிறப்பு துணை தோ்வில் தோ்ச்சி பெற்ற தமிழக மாணவா்களும், பொது கலந்தாய்வில் பங்கேற்க முடியாத மாணவா்களும்  இணையதளங்கள் மூலம் நவ.3-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும்போதே, அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. பின்னா், சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் நவ.8-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு இணையவழியில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் 9,054 மாணவா்களுக்கு நவ.21-இல் தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படும். அந்த ஒதுக்கீட்டை நவ.21, 22 ஆகிய தேதிகளில் உறுதிப்படுத்த வேண்டும். இதையடுத்து நவ.23-ஆம் தேதி இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com