கொடைக்கானலில் கன மழை: அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுப்பு

கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் கனமழையால் அருவிகளில் அதிக அளவு தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது.
கொடைக்கானல் வெள்ளிநீர்வீழ்ச்சியில் அதிக அளவு தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது.
கொடைக்கானல் வெள்ளிநீர்வீழ்ச்சியில் அதிக அளவு தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது.



கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் கனமழையால் அருவிகளில் அதிக அளவு தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக பலத்தமழை பெய்து வருவதால் 9.4.செமீ.மழை பதிவாகியுள்ளது.

இந்த மழையால் கொடைக்கானல் வத்தலக்குண்டு,பழனி, தாண்டிக்குடி ஆகிய மலைச் சாலைகளில் பல இடங்களில் மண் சரிவும், சிறு,சிறு கற்களும் விழுந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதிகளில் வாகனங்களில் செல்பவர்கள் கற்களை அகற்றிவிட்டு செல்கின்றனர். பெரிய அளவில் போக்குவரத்திற்கு எந்தவிதமான பிரச்னைகள் இல்லை .

இருப்பினும் காலை முதல் மழையின் தாக்கம் குறைந்துள்ளது.ஆனால் மேக மூட்டமும் விட்டு விட்டு லேசான சாரல் நிலவி வருகிறது. 

இரண்டு நாள்களாக பெய்த "பலத்த மழையால் வெள்ளி அருவி,வட்டக்கானல் அருவி,செண்பகா அருவி,பாம்பார் அருவி,பேரிபால்ஸ் அருவி, மற்றும் பல்வேறு அருவிகளில் அதிக அளவு தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது.

இதையடுத்து கொடைக்கானல் ஏரியைச்சுற்றி மழைத் தண்ணீர் அதிகமாக தேங்கி கிடக்கிறது. இதனால் அப் பகுதிகளில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.

ஏரி அதன் முழுகொள்ளளவான 36 அடி உயரம் நிரம்பி மறுகால் பாய்ந்து வழிதோடியது. இதனால் கரையோரம் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com