உத்தமபாளையத்தில் விடிய விடிய மழை: 71.4 மி.மீட்டர் மழைப்பொழிவு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை விடிய விடிய மழை பெய்ததால் நீர்நிலைகள் நீர்வரத்து அதிகமனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சண்முகா நதி நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் 47 அடியாக  உயர்ந்துள்ளது.
சண்முகா நதி நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் 47 அடியாக உயர்ந்துள்ளது.


உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை விடிய விடிய மழை பெய்ததால் நீர்நிலைகள் நீர்வரத்து அதிகமனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக பெய்து வருகிறது . அதன்படி தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூர் , கோம்பை, ஓடைப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது.

இந்த மழைப் பொழிவு காரணமாக முல்லைப் பெரியாறு அணை,  சண்முகா நதி நீர் தேக்கம் என மாவட்டத்தின் பல்வேறு நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நீர்வரத்து: பெரியாறு அணைக்கு வினாடிக்கு 6098 கன அடியும், மஞ்சளாறு அணைக்கு 205 கன அடியும்,
சோத்துப்பாறை அணைக்கு 173 கண அடியும் , சண்முகா நதிக்கு 252 கன அடியும், வைகை அணை 2082 கன அடியாக நீர்வரத்து உள்ளது.

மழையளவு( மி .மீ): உத்தமபாளையம் 71.4, கூடலூர் 77 ,பெரியகுளம் 50 ,சோத்துப்பாறை 64, தேக்கடி 56.6, அரண்மனை புதூர் 46.4, ஆண்டிபட்டி 39.

புதன்கிழமை காலை முதல் மழை பொழிவு இன்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com