கோவை: தகுந்த கட்டுப்பாடுகளுடன் அனுசரிக்கப்படும் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள்

கோவை மத்திய சிறைச்சாலையில் தகுந்த கட்டுப்பாடுகளுடன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 
தகுந்த கட்டுப்பாடுகளுடன் அனுசரிக்கப்படும் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள்
தகுந்த கட்டுப்பாடுகளுடன் அனுசரிக்கப்படும் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள்


கோவை மத்திய சிறைச்சாலையில் தகுந்த கட்டுப்பாடுகளுடன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனாரின் 84 வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மத்திய சிறையில் சிதம்பரனாரின் நினைவாக வைக்கப்பட்டுள்ள அவர் இழுத்த செக்கிற்கு பலதரப்பட்ட மக்கள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் ஆண்டு தோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 

ஆண்டுதோறும் அதிகப்படியானோர் வருவது வழக்கம். ஆனால் இம்முறை வைரஸ் தொற்று பரவல் காரணமாக கோவை மத்திய சிறையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஒரு அமைப்பிற்கு நான்கு பேர் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாலை அணிவித்து மரியாதை செலுத்த வரும் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கிருமி நாசினிகளை பயன்படுத்திய பின்னரே சிதம்பரனாரின் செக்கிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

வ.உ.சி நினைவு நாளை முன்னிட்டு கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ள அவர் இழுத்த செக்கு சைவப் பெருமக்கள் பேரவை சார்பில் செயலாளர் சுரேஷ் துணைச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் செயற்குழு உறுப்பினர் மார்க்கெட் செல்வம், பாபா, செந்தில், உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com