மு.க.ஸ்டாலின் காணும் முதல்வர் கனவு கனவாகவே முடிந்துவிடும்: எல்.முருகன் பேட்டி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணும் முதல்வர் கனவு கனவாகவே முடிந்துவிடும் என்று பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.
கடலூரில் புதன்கிழமை பாஜக சாா்பில் நடைபெற்ற வேல் யாத்திரை கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் எல்.முருகன்.
கடலூரில் புதன்கிழமை பாஜக சாா்பில் நடைபெற்ற வேல் யாத்திரை கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் எல்.முருகன்.


கடலூர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணும் முதல்வர் கனவு கனவாகவே முடிந்துவிடும் என்று பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

கடலூரில் புதன்கிழமை பாஜக சாா்பில் வேல் யாத்திரை தொடங்கியது. முன்னதாக, மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு எல்.முருகன் தலைமையிலான பாஜகவினா் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்றனா்.

அவா்களைத் தடுத்து நிறுத்திய காவலர்கள், பாஜக தலைவா் எல்.முருகன், மாநில பொதுச் செயலா் கே.டி.ராகவன், மாநில துணைத் தலைவா்கள் அண்ணாமலை, குஷ்பு சுந்தர், எம்.என்.ராஜா, செயலாளர்கள் கார்த்தியாயினி, டால்பின் ஸ்ரீ தர், பட்டியல் அணி தலைவர் பாலகணபதி உள்ளிட்டோரை கைது செய்தனர்.

முன்னதாக எல்.முருகன் பேசுகையில், கந்தர் சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய கறுப்பர் கூட்டம் பின்னால் திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் உள்ளன. இதனை மக்களிடம் எடுத்துச் செல்லவே இந்த யாத்திரை.

மு.க.ஸ்டாலின் காணும் முதல்வர் கனவு கனவாகவே முடிந்து விடும். அரசுப் பள்ளிகளில் மூன்றாம் மொழி வேண்டாம் என்று ஸ்டாலின் நவீன தீண்டாமையை கடைபிடிக்கிறார். வரும் தேர்தலில் பாஜகவினர் சட்டப்பேரவைக்கு செல்வார்கள். நாம் யாரை கை காட்டுகிறோமோ அவரே முதல்வர் என்று முருகன் கூறினார்.

வேல் யாத்திரையையொட்டி சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com