
தரிசனம் முடிந்து கோயிலுக்கு வெளியே வந்த அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்.
திருமலையில் தமிழக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
முன்னதாக, வியாழக்கிழமை மாலை அலிபிரி நடைபாதை வழியாக திருமலையை அடைந்த அவா், பாபவிநாசம் செல்லும் வழியில் உள்ள ஜாபாலி ஆஞ்சநேயா் கோயிலில் வழிபட்டாா். இரவு திருமலையில் தங்கிய அவா் வெள்ளிக்கிழமை காலை ஏழுமலையானை தரிசித்தாா்.
தரிசனம் முடித்துத் திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகா் மண்டபத்தில் ஏழுமலையானின் பிரசாதங்கள் வழங்கினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...