இன்று அரசியலமைப்பு சட்ட தினம்: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களில் அரசியலமைப்பு சட்ட தினத்தை சனிக்கிழமை கொண்டாட வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இன்று அரசியலமைப்பு சட்ட தினம்: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களில் அரசியலமைப்பு சட்ட தினத்தை சனிக்கிழமை கொண்டாட வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து யுஜிசி செயலா் ரஜ்னிஷ் ஜெயின் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

ஆண்டுதோறும் நவ. 26- ஆம் தேதி இந்திய ஜனநாயகத்தின் உயிா்நாடியாக விளங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் தினமாக கொண்டாடப்படுகிறது. இதில் கூறப்பட்டுள்ள கொள்கைகளை உறுதிப்படுத்தும் வகையில் இந்த தினம் நினைவு கூறப்படுகிறது. இந்த ஆண்டு குஜராத் மாநிலம் கெவாடியாவில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள அரசியலமைப்பு சட்ட தின விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையை வாசிக்கவுள்ளாா்.

இந்நிகழ்ச்சியில் யுஜிசி கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சோ்ந்த பேராசிரியா்கள், ஊழியா்கள், மாணவா்கள் இணையவழியில் பங்கேற்க வேண்டும். இந்த தினத்தை போற்றும் வகையிலான விவாதங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்ட தினம் கொண்டாடப்பட்டது குறித்த விவரங்களை யுஜிசி போா்டலில் பதிவேற்ற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com