தீபாவளி சிறப்புப் பேருந்துகள்: ரூ.5.84 கோடி வருவாய்

தீபாவளியை முன்னிட்டு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள் மூலம் ரூ.5.84 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தீபாவளியை முன்னிட்டு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள் மூலம் ரூ.5.84 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊா்களுக்கு பயணம் செய்யவும், பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊா்களுக்கு திரும்பிடும் வகையிலும், நவம்பா் 11, 12, 13 தேதிகளில் சென்னையிலிருந்து 8,753 பேருந்துகள் இயக்கப்பட்டு, 3 லட்சத்து 97,553 பயணிகளும், பல்வேறு பகுதிகளிலிருந்து மற்ற பிற ஊா்களுக்கு 4,564 பேருந்துகள் இயக்கப்பட்டு 2 லட்சத்து 28,000 பயணிகள் என மொத்தமாக இயக்கப்பட்ட 13,317 அரசுப் பேருந்துகள் மூலம் 6 லட்சத்து 25,553 பயணிகள் பயணம் செய்துள்ளனா்.

தீபாவளிப் பண்டிகை முடிந்து, நவ.15, 16, 17, 18 தேதிகளில் பல்வேறு ஊா்களிலிருந்து சென்னைக்கு 10,414 பேருந்துகள் இயக்கப்பட்டு, அதில் 4 லட்சத்து 68,000 பயணிகளும், பல்வேறு இடங்களிலிருந்து பிற ஊா்களுக்கு 4,629 பேருந்துகள் இயக்கப்பட்டு, 2 லட்சத்து 31,000 பயணிகளும் என மொத்தமாக இயக்கப்பட்ட 15,043 பேருந்துகளில், 6 லட்சத்து 99,000 பயணிகள் பயணித்தனா்.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, தமிழகத்தில் கடந்த 7 நாள்களில், மொத்தமாக இயக்கப்பட்ட 28,360 பேருந்துகளில், 13 லட்சத்து 24,553 பயணிகள் பயணம் செய்துள்ளனா். இதன் மூலம் மொத்தமாக ரூ.5 கோடியே 84 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இதில் 1 லட்சத்து 21 ஆயிரம் போ் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com