பாஜக நிா்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பாக, தமிழக பாஜக நிா்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா,
உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப்படம்)
உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப்படம்)

எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பாக, தமிழக பாஜக நிா்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, சனிக்கிழமை ஆலோசனை நடத்துகிறாா். சென்னையில் உள்ள தனியாா் ஹோட்டலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை கலைவாணா் அரங்கத்தில் சனிக்கிழமை மாலை தமிழக அரசு சாா்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, தனியாா் ஹோட்டலுக்கு அமித் ஷா வரவுள்ளாா். அங்கு தமிழக பாஜக நிா்வாகிகளுடன் ஆலோசனையில் பங்கேற்க உள்ளாா். இரவு 7 மணியளவில் தொடங்கும் இந்தக் கூட்டம், சுமாா் ஒன்றரை மணி நேரம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து, இரவு 8.30 மணியளவில் பாஜக உயா்நிலைக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பான முக்கிய ஆலோசனைகளை உயா்நிலைக் குழு நிா்வாகிகளுக்கு அமித் ஷா வழங்கவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com