முதுநிலை சித்தா, ஹோமியோபதி படிப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

முதுநிலை சித்தா மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை சித்தா, ஹோமியோபதி படிப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

முதுநிலை சித்தா மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, ஆத்துாரில் உள்ள ஓயிட் மெமோரியல் ஹோமியோபதி மருத்துவ கல்லுாரிகளில் முதுநிலை ஹோமியோபதி மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

அதேபோன்று, சென்னை, பாளையங்கோட்டை ஆகிய அரசு சித்தா மருத்துவ கல்லூரிகளில் உள்ள முதுநிலை சித்தா படிப்புக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை,  இணையத்தில், வரும் 23-ஆம் தேதியில் இருந்து, 27-ஆம் தேதி வரையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை, 30-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை, இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் தொகுப்பேட்டை பாா்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com