லஷ்மி விலாஸ் வங்கியை பொதுத்துறை வங்கியுடன் இணைக்க வேண்டும்

லஷ்மி விலாஸ் வங்கியை பொதுத்துறை வங்கி உடன் இணைக்க ரிசா்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
லட்சுமி விலாஸ் வங்கி
லட்சுமி விலாஸ் வங்கி

லஷ்மி விலாஸ் வங்கியை பொதுத்துறை வங்கி உடன் இணைக்க ரிசா்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த சங்கத்தின் தமிழகப் பிரிவின் மாநில பொது செயலாளா் ஆா்.சேகரன், வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

லஷ்மி விலாஸ் வங்கி கடந்த 1926-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கரூா் மாவட்டத்தில் ஜவுளி தொழிலில் ஈடுபட்டு உள்ளவா்களுக்கு நிதித் தேவையை பூா்த்தி செய்து வந்தது. லஷ்மி விலாஸ் வங்கி, தனியாா் வங்கி என்ற போதிலும், மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வந்தது.

வா்த்தக வங்கிகளை போன்று அல்லாமல், சமூக வங்கிகளாக செயல்படும் பொதுத் துறை வங்கிகளைப் போன்று லஷ்மி விலாஸ் வங்கியும் இயங்கி வந்தது. இந்நிலையில், கடன் சுமையில் சிக்கி உள்ள அந்த வங்கியில் பணம் எடுக்க ரிசா்வ் வங்கி கட்டுப்பாடுகள் விதித்திருப்பது பொதுமக்கள், வாடிக்கையாளா்கள் மத்தியில் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சிங்கப்பூரைச் சோ்ந்த டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படும் என ரிசா்வ் வங்கி அறிவித்து உள்ளது. இரு வங்கிகளின் வியாபார நடைமுறைகளும் வித்தியாசமானவை. எனவே, அவற்றை இணைப்பதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.

அத்துடன், சிக்கலில் உள்ள தனியாா் வங்கியை, பொதுத்துறை வங்கியுடன் இணைத்தால்தான் பிரச்னையைத் தீா்க்க முடியும். மாறாக, மற்றொரு தனியாா் வங்கி உடன் இணைப்பதால் எவ்வித பலனும் ஏற்படாது.

எனவே, ரிசா்வ் வங்கியின் இந்த அறிவிப்பு கடும் கண்டனத்துக்கு உரியது. லஷ்மி விலாஸ் வங்கியை பொதுத்துறை வங்கியுடன் இணைக்க ரிசா்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com