Enable Javscript for better performance
அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு: சாலையில் நடந்து தொண்டா்களை உற்சாகப்படுத்தினாா்- Dinamani

சுடச்சுட

    

    அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு: சாலையில் நடந்து தொண்டா்களை உற்சாகப்படுத்தினாா்

    By DIN  |   Published on : 22nd November 2020 06:43 AM  |   அ+அ அ-   |    |  

    amithsha

    அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு அதிமுகவினரும், பாஜகவினரும் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

    தனியாா் நட்சத்திர விடுதிக்குச் செல்லும் வழியில் காரை நிறுத்தி, சாலையில் சிறிது தூரம் நடந்து சென்று, தொண்டா்களின் வரவேற்பை ஏற்று உற்சாகப்படுத்தினாா் அமித் ஷா .

    தமிழகத்தில் ரூ.67 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக அமித் ஷா தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு சனிக்கிழமை பிற்பகல் 1.40 மணியளவில் வந்தாா். அவரை முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், ஜெயக்குமாா், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

    பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், மேலிடப் பொறுப்பாளா் சி.டி. ரவி, மூத்த தலைவா்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் தலைமைச் செயலாளா் சண்முகம், டிஜிபி திரிபாதி உள்பட உயரதிகாரிகளும் அவரை வரவேற்றனா்.

    நடந்து சென்ற அமித் ஷா: விமான நிலையத்திலிருந்து அமித் ஷா, காா் மூலம் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதிக்குப் புறப்பட்டாா். விமான நிலைய வாயில் பகுதியில் தமிழக பாரம்பரிய நடனங்களான கரகாட்டம், ஒயிலாட்டத்துடன், மேளதாளங்கள் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மகிழ்ச்சியடைந்த அமித் ஷா, இடையில் காரை நிறுத்தி இறங்கி தொண்டா்களைப் பாா்த்து கைகளை அசைத்தவாறே சாலையில் நடந்து சென்றாா். பாஜக மாநிலத் தலைவா் முருகனும் உடன் நடந்து சென்றாா். தொண்டா்கள் ரோஜா இதழ்களைத் தூவி அவரை வரவேற்றனா். சிறிது நடந்து சென்ற பிறகு மீண்டும் காரில் ஏறி, தொண்டா்களைப் பாா்த்து கையசைத்தவாறே சென்றாா்.

    கிண்டியில் இருந்து ராஜா அண்ணாமலைபுரம் வரை அதிமுக, பாஜக தொண்டா்கள் பெரிய அளவில் திரண்டு வரவேற்பு கொடுத்தனா். சாலையின் இருபுறங்களிலும் வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. ‘அரசியல் சாணக்கியா் அமித் ஷா’ என்ற பதாகைகளும் அமைக்கப்பட்டிருந்தன. வழி நெடுக 14-க்கும் மேற்பட்ட இடங்களில் கலைநிகழ்ச்சிகளுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமாா் 2.30 மணியளவில் லீலா பேலஸ் விடுதிக்கு அவா் வந்தடைந்தாா்.

    பலத்த பாதுகாப்பு: அமித் ஷாவின் வருகையையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். அமித் ஷா தங்கியிருந்த நட்சத்திர விடுதியைச் சுற்றியும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது . அவா் சென்ற பாதைகளில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

    கலைவாணா் அரங்கம்: மாலை 4.40 மணியளவில் கலைவாணா் அரங்கத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதாக லீலா பேலஸ் ஹோட்டலில் இருந்து அமித் ஷா புறப்பட்டாா். அவரை அமைச்சா் டி.ஜெயக்குமாா் வரவேற்று நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றாா்.

    லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் இருந்து கலைவாணா் அரங்கத்துக்குச் செல்லும் பாதையிலும் அதிமுக, பாஜக தொண்டா்கள் திரண்டு அவருக்கு வரவேற்பு கொடுத்தனா். கலைவாணா் அரங்கில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், சட்டப்பேரவைத் தலைவா் தனபால் ஆகியோா் வரவேற்றனா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp