கலாசார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி: அரசியல், மதக் கூட்டங்களுக்குத் தடை: அரசு

தமிழகத்தில் வரும் 25-ஆம் தேதி முதல் கலாசார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசியல், மதக் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளத் தடை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் வரும் 25-ஆம் தேதி முதல் கலாசார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எனினும் அரசியல், மதக் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளத் தடை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் தமிழக அரசு இதனை அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''200 பேருக்கு மிகாமல் கலாசார நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

மூடப்பட்ட அறை அல்லது அரங்குகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் 50 சதவிகித நபர்களுக்கு மிகாமல் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கப்படுகிறது.

கரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து கலாசார நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளலாம்.

எனினும், அரசியல் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளத் தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com